அம்மன் கோவில்களில் குத்துவிளக்கு பூஜை

அம்மன் கோவில்களில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-13 18:18 GMT

அரிமளம் ஒன்றியம் நெடுங்குடி ஊராட்சி கைலாசபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் 30-ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதைெயாட்டி அம்மன் மற்றும் கருப்பண்ணா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து 351 பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

ஆதனக்கோட்டை அருகே சோத்துப்பாளை கிராமத்தில் மந்தைபிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் 1008 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு, குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபம் காண்பித்து வழிபட்டனர்.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்