நாடியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

நாடியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-01 17:36 GMT

ஆலங்குடியில் நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்புக்கட்டுதலுடன் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து நேற்று கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 301 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) மது எடுப்பு விழா நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்