குறுஞ்செய்தி வராத விண்ணப்பதாரர்கள் குழப்பம்

குறுஞ்செய்தி வராத விண்ணப்பதாரர்கள் குழப்பம்

Update: 2023-08-14 19:15 GMT

கோவை

மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து குறுஞ்செய்தி வராத விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மகளிர் உரிமை தொகை

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இதற்கான விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதற்கட்ட விண்ணப்பதிவு முகாம் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து 2-ம் கட்ட விண்ணப்பதிவு முகாம் கடந்த 5-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 44 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் தற்போது வரை 6 லட்சத்த 80 ஆயிரம் பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கக்கோரி விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் இவ்வாறு மகளிர் தொகை விண்ணப்பித்தவர்களின் செல்போன் எண்ணிற்கு சிலருக்கு மட்டும் மகளிர் தொகை உரிமம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து உள்ளது. பலரின் செல்போன் எண்ணிற்கு எவ்வித குறுஞ்செய்தியும் வரவில்லை. இதனால் அவர்கள் தங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா என்கிற குழப்பத்தில் உள்ளனர்.

குறுஞ்செய்தி

இதனையடுத்து கோவை பீளமேடு பகுதி கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் அந்த பகுதி பெண்கள் கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை கோரி பலர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் ஒரு சில நபர்களுக்கு தங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற குறுஞ்செய்தி வந்து உள்ளது.

ஆனால் பலருக்கு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ என எவ்வித குறுஞ்செய்தியும் வர வில்லை. இதனால் விண்ணப்பதாரர்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து யாரிடம் முறையிட வேண்டும் என்பதும் தெரியவில்லை. எனவே குறுஞ்செய்தி வராத விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்து விளக்க வேண்டும். என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்