இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

இளம்பெண் கடத்தலா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-09-13 18:27 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் அதே ஊரில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் தனது தந்தையை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்