பெண் என்ஜினீயர் கடத்தலா?
ராமநாதபுரத்தில் பெண் என்ஜினீயரை கடத்தி சென்று இருக்கலாம் என அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர்.
கேணிக்கரை,
ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். (வயது 59). இவர் கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ரோஷினி (24) என்ஜினீயரிங் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் ரோஷினியை வீட்டில் இருந்து காணவில்லையாம். அவரை சிலர் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் தனது மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் முத்துராமலிங்கம் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.