பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது. ஹாரீஸ் ரீபார் நிறுவனத்தின் மனித வள மேலாளர்கள் முகம்மது யூனுஸ் மீரான், கணேஷ், திலீப் குமார், யூசுப், விஜய்குமார், மற்றும் அருண்குமார் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில், 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் எம். எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பா.பாலசுப்பிரமணியன், முதல்வர் ஜி.ரமேஷ் உள்பட பலர் பாராட்டினர். ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் செய்து இருந்தனர்.