பிரசார நடைபயணம்

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம்

Update: 2023-03-12 18:45 GMT

விழுப்புரம்

குறைந்தபட்ச ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை ஒழித்து, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வருகிற ஏப்ரல் 5-ந்தேதி பேரணி நடைபெற உள்ளது. இப்பேரணியை மக்களிடையே விளக்கும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யு. மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நடைபயண பிரசார இயக்கத்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் காணை கடைவீதியில் நடைபெற்ற நடைபயண பிரசார இயக்கத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் நாகராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நடைபயண பிரசார இயக்கத்தை முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ராமமூர்த்தி தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கவுரையாற்றினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் பழனி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தாண்டவராயன், மாவட்ட செயலாளர் முருகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில துணைச்செயலாளர் கணபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சிவராமன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு நடைபயணமாகசென்று மக்களிடம் விளக்கவுரையாற்றினர். காணையில் தொடங்கிய இந்த நடைபயணமானது பெரும்பாக்கம், தோகைப்பாடி, இந்திரா நகர் வழியாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு வந்தடைந்தது. முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, கோரிக்கைகளை விளக்கி நிறைவுரையாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்