சென்னிமலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசார கூட்டம்

சென்னிமலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசார கூட்டம்

Update: 2023-08-02 21:08 GMT

சென்னிமலை

மத்திய அரசை கண்டித்தும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 9-ந் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதனை விளக்கி நாடு முழுவதும் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி சென்னிமலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது. சென்னிமலை பி.ஆர்.எஸ் ரோடு, குமராபுரி, ஈங்கூர் ரோடு, பாலமுருகன் தியேட்டர், ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், குமரன் சதுக்கம், காங்கயம் ரோடு, சென்னிமலை பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

பிரசார இயக்கத்திற்கு கே.எஸ்.பி.ராஜேந்திரன் (எல்.பி.எப்) தலைமை தாங்கினார். ஆர்.ரவி (ஏ.ஐ.டி.யு.சி), எம்.ராமசாமி (சி.ஐ.டி.யு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.பொன்னுசாமி, விசைத்தறி தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.செங்கோட்டையன், கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்