தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-07 20:08 GMT

இரும்பாலை

சேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மல்லமூப்பட்டி சுந்தர் நகரில் நடைபெற்றது. முகாமிற்கு சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ பி.நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சேலம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி ராஜா, மல்லமூப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியில் புதிய உறுப்பினர் சேர்த்தல் முகாமை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் பொதுக்குழு உறுப்பினர் பூபதி, தளவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் கே.எம்.ராஜா, விஜயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தண்டாயுதம், ராமர், வடிவேல், அண்ணாமலை, செல்வம், கார்த்திக், மணிகண்டன், சீனிவாசன், ஆர்.சி.சுப்பிரமணி, ஆனந்த், ரமேஷ், உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர், முன்னதாக வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்