நல்லூரில்மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Update:2023-01-21 00:15 IST

கந்தம்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் நல்லூர் மாரியம்மன் கோவில் திடலில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா தலைமை தாங்கினார். பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன், நல்லூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புற தொடர்பு பணியாளர் கவிதா, பரமத்தி வட்டார கல்வி அலுவலர் கவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமில் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை பொதுமக்களிடம் இருந்து 186 மனுக்கள் பெறப்பட்டன. இதில் இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், இலவச தையல் எந்திரம், மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர வண்டி ஆகியவை அடங்கும். மேலும் மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்பட்டு அடுத்த மாதம் 8-ந் தேதி மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்