கருத்தடை சிகிச்சை முகாம்

கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது.

Update: 2022-11-19 18:45 GMT

சிவகங்கை மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் யோகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை இரு வார விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த சிகிச்சையினை 3 நிமிடங்களில் கத்தி இல்லாமல் தையல் ரத்த இழப்பு மற்றும் தழும்புகள் ஏற்படாமல் மயக்க மருந்து செலுத்தாமல் செய்து கொள்ளலாம். கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1100-ம் அவரை ஊக்குவிப்பதற்கு ரூ.200-ம் வழங்கப்படும். எனவே தகுதி வாய்ந்த ஆண்கள் இந்த சிகிச்சையில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்