கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 220 சிறப்பு மருத்துவ முகாம்கள்

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 220 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

Update: 2022-11-06 14:41 GMT


ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் ஊராட்சி ரமலான் நகரில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று சிறப்பு மருத்துவ முகாமை தொடங்க வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- மழைக்காலம் தொடங்கி உள்ளதை யொட்டி கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை சரி செய்யும் வகையில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சிறப்பு முகாம் இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 20 முகாம் வீதம் 220 சிறப்பு முகாம்கள் 11 ஊராட்சி ஒன்றியத்திலும் நடைபெறுகின்றன. இதன் மூலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. தேவையான சிகிச்சைகளையும், மருந்துகளையும் வழங்கி பாதுகாப்பான முறையில் பராமரித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கூறினார். சிறந்த முறையில் பசு கன்றுகள் வளர்த்து வருபவர்களை பாராட்டி கலெக்டர் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை இணை இயக்குனர் இளங்கோவன், உதவி இயக்குனர்கள், கால்நடை டாக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்