இலவச மருத்துவ முகாம்

பனைக்குளத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-09-11 17:34 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளத்தில் ராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் ஏ.ஆர். மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் பனைக்குளம் ஊராட்சி தலைவர் பவுசியாபானு, துணைத் தலைவர் செய்யது அஸ்வர்தீன், முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் சிராஜுதீன், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ராமநாதபுரம் ஏ.ஆர். மருத்துவ மனையின் தலைமை மருத்துவரும் மகப்பேறு மகளிர் இயல் குழந்தையின்மை மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர்பாத்திமா சின்னத்துரை, பனைக்குளம் பிரமுகர ்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். ஏ.ஆர். மருத்துவமனையின் மருத்துவர் ராசிகா அப்துல்லா வரவேற்றார். நோயாளிக்கு வழங்கப்படக்கூடிய சிகிச்சைகள், வசதிகள் குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். ராம்நாடு ராயல் ரோட்டரி சங்கம் தலைவர் மணிகண்டன், செயலாளர் பாலகண்ணன் ஆகியோர் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். முகாமில் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பொது அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் லேப்ராஸ்கோபி, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அட்டிப் அப்துல்லா, குழந்தை நல மருத்துவர் ஆயிசத்துல் நசீதா, பொதுநல மருத்துவர் முகமது யாசர் அரபாத், பல் அறுவை சிகிச்சை நிபுணர் ரம்மீஸ் ராம்நாத் உள்ளிட்ட மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். முடிவில் அனைவருக்கும் பனைக்குளம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் தலைவர் பவுசியா பானு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்