பால் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தரம் பிரித்தல் பயிற்சி

பால் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தரம் பிரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-07-10 17:27 GMT

தொண்டி, 

திருவாடானை யூனியனில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பால் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்களுக்கு உள்கட்டமைப்பு பொருட்கள் வாங்கவும் புது சொத்துக்களை உருவாக்கி பால் உற்பத்தியை பெருக்கி பொருளாதார மேம்பாடு அடைந்து நீடித்த வாழ்வாதாரத்தை பெருக்கவும் தொடக்க நிதியாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கிராமப்புறங்களில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி அடைய இந்த திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் பால் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பால் தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல் போன்ற வற்றை எந்திரங்கள் மூலம் கண்டறியும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் செயல் அலுவலர்கள் பரம சிவம், ராஜபாண்டி, வட்டார அணி தலைவர் செல்வமணி, திட்ட செயலாக்குனர் சித்திரவேலு மற்றும் பால் உற்பத்தி யாளர் குழு உறுப்பினர்கள், தொழில்சார் சமூக வல்லுனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்