நாமக்கல்லில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
நாமக்கல்லில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமுக்கு துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் ஜெயந்தினி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் சிறு வயதில் தொழுநோயை கண்டுபிடிக்காவிட்டால் அது பிற்காலத்தில் ஊனத்தை ஏற்படுத்தி விடும். எனவே தொழுநோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதில் நல கல்வியாளர் லட்சுமி நாராயணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.