தூத்துக்குடிக்கு வந்த நடிகர் தனுசிடம் ஆர்வத்துடன் 'ஆட்டோகிராப்' வாங்கிய ரசிகர்கள்
தூத்துக்குடிக்கு வந்த நடிகர் தனுசிடம் ரசிகர்கள் ஆர்வத்துடன் ‘ஆட்டோகிராப்’ வாங்கினர்.
நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தென்காசியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகர் தனுஷ் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.
விமான நிலையத்தில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ரசிகர்கள் தனுசுடன் 'செல்பி' எடுத்துக் கொண்டனர். மேலும் பலர் ஆர்வத்துடன் 'ஆட்டோகிராப்'பும் பெற்றுக் கொண்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.