கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-12-13 00:30 IST

தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தமிழன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும். போலீஸ் துறை, வருவாய்த்துறையை பயன்படுத்தி கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை குற்றவாளிகள் போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். இலவச செட்டாப் பாக்ஸ்களை மக்களுக்கு வழங்கிவிட்டு தற்போது செயல்படாத பாக்ஸ்களுக்கு அவற்றின் கிரயத்தொகை என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் நிர்வாகிகள், ஆபரேட்டர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்