ஈரோடு: கடன் தொல்லையால் கேபிள் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை..!

ஈரோடு அருகே கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்த கேபிள் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-29 04:52 GMT

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் தனது மனைவி கோகிலா உடன் பெருந்துறையில் கேபிள் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோரிடம் சொத்தில் பங்கு கேட்டதாகவும் அதற்கு அவர்கள் தர மறுத்ததாக தெரிகிறது. மேலும் கடன் தொல்லையால் மிக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்

இந்நிலையில் நேற்று முன்தினம் வன்னாம் பாறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மனைவியுடன் வந்து தங்கி இருந்துள்ளார். பின்னர் நேற்று கோகிலா அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற போது, வீட்டில் தனியாக இருந்த கார்த்திகேயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்