முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

Update: 2023-01-04 00:54 GMT

சென்னை,


தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டது.

ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சரவை கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டப்படும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஜனவரியில் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் 9-ந் தேதி தொடங்க உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார்.

கவர்னர் ஆற்றும் உரையில் இடம் பெறும் கருத்துகள், திட்டங்கள் போன்றவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட உள்ளது. அதுபற்றி அமைச்சரவை ஆலோசித்து அங்கீகாரத்தை வழங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்