டி.என்.பி.எஸ்.சி தலைவராக சி.முனியநாதன் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி . தலைவராக சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
சென்னை,
டி.என்.பி.எஸ்.சி . தலைவராக இருந்த க.பாலச்சந்திரன், வயது அடிப்படையில் கடந்த 9-ஆம் தேதி ஓய்வு பெற்றாா்.இதனை தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி .) பொறுப்பு தலைவராக, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வாணைய உறுப்பினராக முனியநாதன் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது பொறுப்பு தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்.