இடைத்தேர்தலையொட்டி போலீசாருக்கு தபால் ஓட்டுப்பதிவு

இடைத்தேர்தலையொட்டி போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு நடந்தது.

Update: 2023-02-21 20:56 GMT

இடைத்தேர்தலையொட்டி போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு நடந்தது.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 1,206 அலுவலர்கள் மற்றும் போலீசார் வாக்குப்பதிவு அன்று பணியில் ஈடுபட உள்ளனர். அதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த தொகுதியில் 58 போலீசாருக்கு வாக்குகள் உள்ளன. அவர்கள் தேர்தல் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால் போலீசாருக்கு ஏற்கனவே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட்டன.

தபால் ஓட்டுப்பதிவு

இந்தநிலையில் போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தபால் ஓட்டு பெறுவதற்கான சீல் வைக்கப்பட்ட பெட்டி அங்கு வைக்கப்பட்டது. அதில் போலீசார் ஒவ்வொருவராக வந்து தங்களது ஓட்டு சீட்டை போட்டார்கள்.

இதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கும் தபால் ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான 3-வது கட்ட பயிற்சி நடக்கும்போது அவர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்வார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்