அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சம் வசூல்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சம் வசூல்

Update: 2022-05-28 20:44 GMT

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கும் வகையில் தமிழக அரசு அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதற்கான நிதியை திரட்ட கோவிலில் அன்னதானத்துக்கென்று உண்டியல் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த உண்டியல் மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதே போல் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் சரஸ்வதி தலைமையில், நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 567 வசூலாகி இருந்தது.

------

Tags:    

மேலும் செய்திகள்