'ஓவர் லோடு' மின்சாரத்தால்வீடுகளில் மின்சாதனங்கள் பழுது
கழுகுமலை அருகே ‘ஓவர் லோடு’ மின்சாரத்தால் வீடுகளில் மின்சாதனங்கள் பழுதடைந்தன.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள வானரமுட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கல்லூரணி கிராமத்தில் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள காளியம்மன் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, காலனி தெரு, சர்ச் தெரு உள்ளிட்ட தெருக்களிலுள்ள வீடுகளில் நேற்று காலை சுமார் 8 மணியளவில் திடீரென்று 'ஓவர்லோடு' மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள 30 வீடுகளில் டி.வி. உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களும் பழுதாகி விட்டது. இதேபோன்று அப்பகுதியில் அடிக்கடி குறைந்தழுத்த மற்றும் ஓவர்லோடு மின்சாரத்தால் வீடுகளில் மின்சாதனங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி சீரான மின்வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.