மோட்டார் சைக்கிள் மோதி இறைச்சிக்கடைக்காரர் பலி

மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மோதி இறைச்சிக்கடைக்காரர் பலி

Update: 2022-12-25 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு தேவ நகரை சேர்ந்தவர் ஷேக்அசேன் மகன் பாஷா(வயது 50). மூங்கில்துறைப்பட்டில் இறைச்சிக்கடை நடத்தி வந்த இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பவுஞ்சிப்பட்டில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மூங்கில்துறைப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். இளையாங்கன்னி கூட்டு சாலை அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பாஷா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்