பனை ஓலை விசிறி விற்பனை மும்முரம்
பனை ஓலை விசிறி விற்பனை மும்முரம் நடைபெற்றது.
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலால் பொதுமக்கள் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின் வெட்டு சமயங்களில் நகர வாசிகள் முதல் கிராம வாசிகள் வரை அனைவருமே பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெயிலின் அருமை மர நிழலில் நிற்கும் போதுதான் தெரியவரும் என்பார்கள். அது போல மின்சாரம் இல்லாத போது தான் விசிறி பயன்பாடு தெரியவரும். ஏழைகளின் ஏ.சி. என அழைக்கப்படும். பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறி விற்பனையில் ஒரு சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வடகாடு பகுதியில் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் இவற்றை விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.