உடுமலை பகுதியில் குடிசைத் தொழிலாக சிறுதானிய மாவு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில் இது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நல்ல மாற்றங்கள்
உலகம் முழுவதும் தனது காலடியைப் பதித்து ஆக்ரோஷமாய் ஆதிக்கம் செலுத்தி பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா என்னும் கொடிய நோயால் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பல நாடுகள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளது. ஏராளமான குடும்பங்கள் தொழிலைத் தொலைத்து விட்டு வருமானத்துக்கு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியில் கடுமையான பாதிப்பை கொரோனா தொற்று காலங்கள் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற எதிர்மறையான மாற்றங்களின் பட்டியல் மிக நீண்டதாக இருக்கிறது. அதேநேரத்தில் கொரோனாவால் ஏற்பட்ட பல நல்ல மாற்றங்கள் வரவேற்புக்குரியதாகவே உள்ளது. குறிப்பாக தன் சுத்தம் பேணுதல் என்ற விஷயம் பலராலும் கடைபிடிக்கப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. மேலும் சிறப்பான மாற்றமாக மக்கள் தங்களுடைய உணவு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். பர்கர், பீட்சா என மேற்கத்திய உணவுகளில் மோகம் கொண்ட பலரும் நமது பாரம்பரிய உணவு முறைக்குத் திரும்பியுள்ளனர்.குறிப்பாக சிறுதானிய உணவு வகைகளை பலரும் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடிசைத்தொழில்
கம்பு, தினை, ராகி, குதிரைவாலி, சோளம், மக்காச்சோளம், சாமை போன்ற சிறுதானியங்கள் மீண்டும் தமிழக இல்லத்தரசிகளின் தேர்வாக மாறியுள்ளது.சமூக வலைத்தளங்களில் சிறுதானிய உணவு வகைகள் அவற்றின் செய்முறைகள் மற்றும் அவற்றிலுள்ள சத்துக்கள் குறித்த தேடல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் உடனடி தோசை மாவு, இட்லி மாவு, ஆப்ப மாவு போன்ற ரெடிமேட் உணவு வகைகளிலும் சிறுதானிய உணவுகள் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளன.உடுமலை பகுதியில் கம்பு, ராகி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட சிறுதானிய தோசை மாவு உற்பத்தியை குடிசைத்தொழிலாக செய்து வருவாய் ஈட்டி வருகிறார்கள். இதுகுறித்து உடுமலை ருத்ரப்பநகரைச் சேர்ந்த மாவு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
கொரோனா காலத்தில் வீட்டிலேயே பால், தோசை மாவு மற்றும் ஆப்ப மாவு விற்பனை செய்து வந்தோம்.தற்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான சிறுதானிய தோசை மாவுகளை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.
விழிப்புணர்குடிசைத்தொழிலான
சிறுதானிய மாவு உற்பத்திவு
சோளத்தில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலம் உள்ளது.இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது.ராகி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.மற்ற சிறுதானியங்களை விட பல மடங்கு கால்சியம் ராகியில் உள்ளது.கம்பு உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது.அதிக அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளிட்ட பல உயிர்ச் சத்துக்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் பிடிக்கிறது.இதுபோன்ற சிறுதானிய உணவுகளை விற்பனை செய்வதுடன் அவற்றிலுள்ள சத்துக்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.