தொழில்களுக்கு சொத்து மீது கூடுதல் கடன்பெற பதிவு செய்ய தேவையில்லை -முதல்-அமைச்சர் அறிவிப்பு

தொழில்களுக்கு சொத்து மீது கூடுதல் கடன்பெற பதிவு செய்ய தேவையில்லை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Update: 2022-09-16 23:24 GMT

மதுரை,

மதுரையில் நேற்று நடந்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை இந்த நிகழ்ச்சியில் நான் வெளியிட விரும்புகிறேன். தொழில் முனைவோர்கள் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறும்போது, சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் ஒப்படைத்து சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது திரும்பவும் பதிவு செய்ய வேண்டிய முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், அத்தனை முறையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கால விரயம் ஏற்படுவதுடன் கடன் பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது பதிவு செய்ய தேவை இல்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்