தொழில் தொடங்க கடன் வழங்கும் முகாம்

தொழில் தொடங்க கடன் வழங்கும் முகாம் 11-ந் தேதி விருதுநகரில் நடக்கிறது என கலெக்டர் ெஜயசீலன் கூறினார்.

Update: 2023-09-04 20:29 GMT


தொழில் தொடங்க கடன் வழங்கும் முகாம் 11-ந் தேதி விருதுநகரில் நடக்கிறது என கலெக்டர் ெஜயசீலன் கூறினார்.

கடனுதவி

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் மத வழி, சிறுபான்மை இனங்களான கிறிஸ்தவர், இஸ்லாமியர், பவுத்தர், சமணர், பார்சி மற்றும் சீக்கிய மதத்தை சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்க, ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனி நபர் கடன், சிறு வணிக கடன், கல்விக் கடன், கறவை மாட்டு கடன், ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன அதன்படி இந்த திட்டங்கள் தொடர்பான விவரங்களையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளவும், கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக 2023- 2024-ம் ஆண்டுக்கான கடன் வழங்கும் முகாம் வட்டார அளவில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

தாலுகா அலுவலகத்தில் முகாம்

முகாமில் மேற்படி கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் கலந்து பயன்பெறலாம். இந்த முகாம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெறுகிறது. அதன்படி விருதுநகரில் வருகிற 11-ம் தேதி, காரியாபட்டியில் 12-ந் தேதி, அருப்புக்கோட்டையில் 13-ந் தேதி, திருச்சுழியில் 14-ந் தேதி, சிவகாசியில் 15-ந் தேதி நடக்கிறது.

ராஜபாளையத்தில் 19-ந் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் 20-ந் தேதி, சாத்தூரில் 21-ந் தேதி, வெம்பக்கோட்டையில் 22-ந் தேதி, வத்திராயிருப்பில் 25-ந் தேதி நடைபெறுகிறது.

ஆவணங்கள்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்கள், இணைப்பதிவாளர், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மதத்திற்கான சான்று, சாதி சான்று, பள்ளி மாற்று சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை நகல், கல்வி கடன்கோருஸேர் உண்மை சான்று, கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்று நகல், திட்ட தொழில் அறிக்கை, பாஸ்போர்ட் புகைப்படம்-2, கூட்டுறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு வங்கிகளையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்