சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிப்பு

சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

Update: 2022-10-22 19:49 GMT

தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அரியலூருக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரியலூரில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க குடும்பத்துடன் வந்தவர்கள் சிரமப்பட்டனர். சாலை ஓரத்தில் கடை வைத்திருந்தவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்