பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பஸ்கள்

பயணிகள் கூட்டத்தால் பஸ்கள் நிரம்பி வழிந்தன.

Update: 2023-01-14 18:55 GMT

பயணிகள் கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை விடப்பட்டதால் பெரம்பலூர் மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கி பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளும், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோரும் நேற்று முன்தினமே சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று முன்தினம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் நேற்று மாலை வேலை முடிந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் நேற்றும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சொந்த ஊர்களுக்கு...

மேலும் வெளியூர்களில் தங்கியிருந்து வேலை பார்க்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வந்தனர். அவர்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தங்களது கிராமங்களுக்கு சென்றதால், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. சில பஸ்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. மேலும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கார், ஆம்னி பஸ்கள் சென்றவாறு இருந்தன. இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்