பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
சந்தவாசல் அருகே பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
கண்ணமங்கலம்
சந்தவாசல் அருகே உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தில் அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவர் பஸ்சின் கண்ணாடியை உடைத்தார். மேலும் இதனை தட்டிக்கேட்ட டிரைவர் மாதவனை ஆபாசமாக திட்டி தாக்கினார்.
இதுகுறித்து டிரைவர் மாதவன் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து, சின்னராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். .