பஸ்-மோட்டார் ைசக்கிள் மோதல்; தொழிலாளி பலி
ஈத்தாமொழி அருகே அரசு பஸ்-மோட்டார் ைசக்கிள் மோதல், தொழிலாளி பலி
ஈத்தாமொழி,
ஈத்தாமொழி அருகே உள்ள சிவசெல்வபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47), தேரிமேல் விளையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (37). தொழிலாளியான இருவரும் சம்பவத்தன்று இரவு தெற்கு சூரங்குடியில் இருந்து ஈத்தாமொழி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மணிகண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ராஜேந்திரன் பின்னால் அமர்ந்திருந்தார். சுண்டபற்றிவிளை அரசு பள்ளி அருகே வந்தபோது எதிேர பெரிய காட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். மணிகண்டனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பஸ் டிரைவர் நாகராஜன் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.