டிராக்டர் மோதி பஸ் டிரைவர் பலி

டிராக்டர் மோதி பஸ் டிரைவர் பலியானார்.

Update: 2022-08-16 19:08 GMT

கரூர் அருகே உள்ள அப்பிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36), பஸ் டிரைவர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர் ஆண்டாங்கோவில் சாலையில் சென்று கொண்டு இருந்தார். வருமான வரித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அந்தவழியாக சென்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கரூர் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் ராமநாதனை (42) பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்