அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
நாகூர் அருகே அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நாகூர்;
நாகையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. மேல வாஞ்சூர்- திட்டச்சேரி சாலை வழியாக பஸ் சென்ற போது எதிரே மேலவாஞ்சூர் அமிர்தா குடியிருப்பு பகுதியை சேர்ந்த குமார் மகன் சத்தியராஜ்(வயது24) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது சத்தியராஜ் நன்னிலத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ஞானசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.