பஸ் கண்டக்டர் விபத்தில் பலி

ராமநாதபுரத்தில் தனியார் பஸ் கண்டக்டர் விபத்தில் பலியானார்.

Update: 2022-07-30 16:54 GMT

முதுகுளத்தூர் அருகே உள்ள பூசேரி கிராமத்தை சேர்ந்தவர் விஜயரெகுநாதன் (வயது 38). இவர் தற்போது ராமநாதபுரம் பட்டணம்காத்தான் தெற்குத்தெரு பகுதியில் குடியிருந்து தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டில் இருந்தார். அப்போது அவரது தனியார் பஸ் டிரைவரான நண்பர் ஒருவர் தன்னை பஸ் நிறுத்தும் இடத்தில் கொண்டுவந்து இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். இதனால் அவரை ஏற்றிக்கொண்டு விஜயரெகுநாதன் மோட்டார் சைக்கிளில் பட்டணம்காத்தான் அருகில் இறக்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று மோதியதில் விஜயரெகுநாதன் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து விஜயரெகுநாதனின் மனைவி அபினயா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருவதோடு மோதிவிட்டு மாயமான லாரி டிரைவரை தேடிவருகின்றனர். பலியான விஜயரெகுநாதனுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் தான் ஆகிறது என்பதும் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்