திம்பம் மலைப்பாதையில் பஸ்- கார் மோதல்

திம்பம் மலைப்பாதையில் பஸ்- கார் மோதல்

Update: 2023-10-01 20:55 GMT

தாளவாடி

சத்தியமங்கலத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடி நோக்கி 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு தமிழக அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை மோகன்ராஜ் என்பவர் ஓட்டினார். திம்பம் மலைப்பாதையின் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அதி்ாஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து காரணமாக திம்பம் மலைப்பாதையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்