பஸ்-கார் மோதல்; வடமாநிலத்தை சேர்ந்தவர் பலி

திண்டிவனம் அருகேபஸ்-கார் மோதல்; வடமாநிலத்தை சேர்ந்தவர் பலியானாா்.

Update: 2022-12-31 18:45 GMT

திண்டிவனம்:

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் மனிஷ் சுரேகா(வயது 52), நித்தின்(45), பூனம், ரேணு சுரேகா(50) உள்ளிட்ட 126 பேர் சுற்றுலாவாக தமிழகத்திற்கு வந்தனர். இங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்த இவர்கள், மீண்டும் கொல்கத்தா செல்ல திட்டமிட்டனர். இதில் மனிஷ்சுரேகா உள்பட 4 பேர் மட்டும் மதுரையில் இருந்து வாடகை காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் கோகுல் என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார், திண்டிவனம் அருகே பாதிரியில் சென்றபோது முன்னால் சென்ற அரசு விரைவு பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் காரின் முன்புறம் அமர்ந்து பயணம் செய்த மனிஷ் சுரேகா சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் கோகுல் உள்பட 4 பேர் சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்