திருச்சியில் இருந்து வேதாரண்யம் நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கோட்டூர் அருகே உள்ள கீழக்கண்டமங்கலம் பிரிவு சாலை பகுதியில் வந்தபோது பஸ்சின் பின்பக்க கண்ணாடியை அடையாளம் தெரியாத ஒருவர் கல்லால் அடித்து உடைத்து விட்டு தப்பிச் சென்றார். இது குறித்து டிரைவர் பக்கிரிசாமி (வயது52), கண்டக்டர் ரவி ஆகியோர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.