வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர் திருடி சென்றார்.
கொண்டலாம்பட்டி:-
கொண்டலாம்பட்டி அருகே உள்ள காக்காபாளையம் பகுதி செட்டியார் காட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 59). இவர் வீட்டை பூட்டி விட்டு வேம்படிதாளத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம், மடிக்கணினி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.