ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் திருட்டு

சின்னசேலம் அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-01 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே தத்தாதிரிபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 78). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் காற்றுக்காக வீட்டின் வெளியே உள்ள வரண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு மர்மநபர்கள் கிருஷ்ணனின் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.5 லட்சத்தை திருடிச்சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் கீழகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு காற்றுக்காக வரண்டாவில் படுத்து தூக்குக்கொண்டிருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் கீழகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்