பேரூராட்சி உரக்கிடங்கில் திருட்டு
திசையன்விளையில் பேரூராட்சி உரக்கிடங்கில் பொருட்கள் திருட்டுப்போனது.
திசையன்விளை:
திசையன்விளை பேரூராட்சி உரக்கிடங்கில் வைத்திருந்த 200 பழைய மின்விளக்குகள், பழைய இரும்புகள், வழிகாட்டி போர்டுகள் திருட்டு போய்விட்டதாகவும், இதுதொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திசையன்விளை போலீசில் பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி புகார் செய்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.