கட்டிட காண்டிராக்டர் வீட்டில் திருட்டு

கட்டிட காண்டிராக்டர் வீட்டில் திருட்டு நடந்தது.

Update: 2022-12-10 19:30 GMT

மேட்டூர்:-

மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் மூலமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 35). கட்டிட காண்டிராக்டர். நேற்றுமுன்தினம் இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவரது உறவினர் கோவிந்தராஜ் என்பவர் முரளிதரன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் பீரோவும் உடைக்கப்பட்டு காணப்பட்டது. இது குறித்து கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், திருச்செந்தூர் சென்றுள்ள முரளிதரன் வந்தால் தான், திருட்டு போன பொருட்களின் விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்