குண்டும், குழியுமான சாலை

கொளப்பள்ளியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-07-01 22:30 GMT


பந்தலூர்


பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து ஏலமன்னா வழியாக பந்தலூர், கூடலூருக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கொளப்பள்ளி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கிடையே கொளப்பள்ளி முதல் எலியாஸ் கடை பகுதி வரை சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்து சாலையின் நடுவே நின்று விடுகின்றன. சேரங்கோடு டேன்டீ அலுவலகம் அருகே சாலையோரத்தில் கடந்தாண்டு பெய்த மழையால் மண் சரிவு ஏற்பட்டது. அங்கு இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது. அதுவும் தற்போது உடைந்து உள்ளது. குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழிகளில் வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்