குண்டும், குழியுமான சாலை
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மதுபான கடைக்கு செல்லும் மதுபிரியர்கள் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்ல முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். உயிர் பலி ஏற்படும் முன் உடனடியாக அரசு மதுபான கடைக்கு செல்லும் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.