எஸ்.பி.பட்டினத்தில் மாட்டுவண்டி பந்தயம்
திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 2-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 2-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், எஸ்.பி.பட்டினம் ஜமாத் தலைவர் ஹசன் அலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 35-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன. எஸ்.பி. பட்டினத்தில் இருந்து ஓரியூர் சாலையில் அதிகபட்சமாக 8 மைல் தூரம் சென்று வந்த மாட்டு வண்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள், வெற்றிக்கோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை காண்பதற்கு சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள், பொதுமக்கள் குவிந்திருந்தனர். திருவாடானை துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.