கல்லல் அருகே சீறி பாய்ந்த மாட்டு வண்டிகள்

கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-05-18 18:45 GMT

காரைக்குடி

கல்லல் அருகே ஆலவிளாம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டு நாச்சியம்மன் கோவில் பாலாபிஷேக விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஆலவிளாம்பட்டி-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 வண்டிகள் கலந்துகொண்டு நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 5 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வீழனேரி சரவணன் மற்றும் அப்பன்திருப்பதி ராகுல் வண்டியும், 2-வது பரிசை கொட்டக்குடி ராமசாமி மற்றும் மட்டங்கிப்பட்டி காவியா வண்டியும், 3-வது பரிசை உசிலம்பட்டி துரை மற்றும் கண்டதேவி மருதுபிரதர்ஸ் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொன்குண்டுப்பட்டி செல்லையா மற்றும் பல்லவராயன்பட்டி அழகு ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை வல்லாளப்பட்டி செல்லியம்மன் வண்டியும், 3-வது பரிசை விராமதி செல்வமணி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்