காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-03-16 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே கல்லலில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான வேலி அம்பலம் மற்றும் தொண்டைமான் ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில் கல்லல்-காரைக்குடி சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 40 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக ேபாட்டி நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டன. போட்டியில் முதல் பரிசை மதகுபட்டி ஆண்டிகாளை வண்டியும், 2-வது பரிசை பாகனேரி ராமநாதன் வண்டியும், 3-வது பரிசை பிரதாப் வெள்ளையப்பர் வண்டியும் பெற்றது.

காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 31 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக போட்டி நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை திருமயம் இளவரசி வண்டியும், 2-வது பரிசை கள்ளந்திரி ஐந்து கோவில் சுவாமி வண்டியும், 3-வது பரிசை நெற்புகப்பட்டி சதீஷ்குமார் வண்டியும் பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை வல்லாலப்பட்டி சஞ்சை சாதனா வண்டியும், 2-வது பரிசை நகரம்பட்டி வாறுக்குவேலி வண்டியும், 3-வது பரிசை கிடாரிப்பட்டி தேர்கொண்ட கருப்பர் வண்டியும் பெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்