தஞ்சை மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் 16 புதிய கட்டிடங்கள்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
தஞ்சை மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட 16 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட 16 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
புதிய கட்டிடங்கள் திறப்பு
தஞ்சையை அடுத்த வல்லம்புதூர் ஊராட்சி, முன்னையம்பட்டி ஊராட்சி ஆகியவற்றில் தலா ரூ.17 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார்.
அதேபோல் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம், சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், திருப்புறம்பியம் ஊராட்சி, சேஷம்பாடி ஊராட்சி, கீழப்பழைவூர் ஊராட்சி, புளியக்குடி ஊராட்சி ஆகியவற்றில் தலா ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
புதிய வகுப்பறை
மேலும் அவர் முகாசாகல்யாணபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சமயன்குடிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாட்டாணிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் தலா ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர், குருங்குளம் கிழக்கு ஊராட்சி, நிரந்தநல்லூர் ஊராட்சி, கார்காவயல் ஊராட்சி ஆகியவற்றில் தலா ரூ.10 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.2 கோடியே 24 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் 16 புதிய கட்டிடங்கள் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அன்பழகன், அண்ணாதுரை, அசோக்குமார், ஒன்றியக்குழு தலைவர்கள் அரசாபகரன், காயத்ரி அசோக்குமார், சுமதி கண்ணதாசன், பழனிவேல், சசிகலா ரவிசங்கர், வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித், லதா, பிரபாகரன் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.