புதர்மண்டி கிடக்கும் பாசன வாய்க்கால்

கொள்ளிடத்தில், புதர்மண்டி கிடக்கும் பாசன வாய்க்காைல தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-23 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பிரதான தெற்குராஜன் பாசன வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்காலாக பிரிந்து கொள்ளிடம் பகுதியில் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து, பின்னர் சந்தபடுகை கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் வாய்க்கால் கடந்த 3 வருடங்களாக தூர்வார படாமல் உள்ளது. இதனால் இந்த வாய்க்கால் தூர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதர் மண்டி காட்சி அளிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் அதிக மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேறி செல்ல முடியாமல் கொள்ளிடம் பகுதியில் உள்ள சுமார் 2000 குடியிருப்பு பகுதிகளையும், தேசிய நெடுஞ்சாலையிலும் அதிகமாக தேங்கி விடுகிறது.

பயிர்கள் அழுகும் அபாயம்

இந்த தண்ணீர் வெளியேறி செல்ல மாதக்கணக்கில் ஆகிவிடுகிறது. பருவ மழை காலத்தில் இந்த வாய்க்கால் முழுமையும் மழை நீரால் நிரம்பி விடுவதால் ஊராட்சிகள் சார்பில் தண்ணீரை வெளியேற்றுவதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த வாய்க்காலை நிரந்தரமாக தூர்வாரி ஆழப்படுத்தாமல் விட்டு விட்டதால் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் எளிதில் வெளியேறி செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

தற்போது மழைக்காலம் வந்துவிட்டதால் உடனடியாக துரித வேகத்தில் இந்த வாய்க்காலில் மண்டி கிடக்கும் முட்புதர்களை அகற்றி வாய்க்காலை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்