பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-17 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை உரிமத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 2017 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 15 சதவீத உயர்வுடன் கூடிய ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பி.எஸ்.என்.எல். பொதுத்துறையில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட உதவி செயலாளர் சுப்பையா, மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய உதவி தலைவர் மோகன்தாஸ் சங்க கொடியை ஏற்றி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கிளை செயலாளர் முத்துராமலிங்கம், கிளை உதவி செயலாளர் பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்